கடந்த 28ஆம் தேதி இரவு சுமார் 9:10 மணியளவில், ராஜஸ்தானில் மிக்-21 'பைஸன்' கிழே விழுந்து நொறுங்கியதில் இரண்டு பயிற்சி பெற்ற பைலட்டுகள் விங் கமாண்டர் மோஹித் ராணா மற்றும் லெப்டினன் அத்விதியா பால் உயிரிழந்தனர். இது போன்ற நடப்பது புதிது அல்ல... தொடர்ச்சியாக அரங்கேறி கொண்டு இருக்கிறது.
மிக்-21 போர் விமான விபத்துகளில் உயிரிழந்த விமானிகளின் எண்ணிக்கையை வழங்க இந்திய விமானப்படை மறுத்தாலும் , இன்று வரை சுமார் 200 பைலட்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய கண்டுபிடிப்பான மிக்-21 பைஸன் போர் விமானத்தை 1963ஆம் ஆண்டில் இருந்து இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் நிலையில் , இதுவரை 293 மிக்-21 போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
மிக்-21 போர் விமான விபத்துக்களை கணக்கிட்டால் அது 30.97% ஆக உள்ளது. இது மோசமானது ஒன்றாகும்... ஆரம்ப கட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து மிக்-21 போர் விமானங்கள் வாங்கப்பட்டாலும் , பிற்காலத்தில் அவற்றில் பாதிக்கும் மேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கடந்த 28ஆம் தேதி அரங்கேறியது இந்தாண்டின் முதல் மிக்-21 போர் விமான விபத்தாகும். 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6 மிக்-21 போர் விமான விபத்துகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா மிக்-21 போர் விமான விபத்தில் உயிரிழந்திருந்தார். மிக்-21 விபத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்திய விமான படையின் மோசமான காலம் என்றால் அது 1999ஆம் ஆண்டு தான். கார்கில் போரின் போது 16 மிக்-21 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது.