தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயில் தண்டவாளங்களில் 50 யானைகள் உயிரிழப்பு- அஸ்வினி வைஸ்னவ்! - யானைகள் உயிரிழப்பு

ரயில் தண்டவாளங்களில் 2019ஆம் ஆண்டு முதல் பிப்.28ஆம் தேதி வரை 50 யானைகள் வரை ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்தார்.

RS
RS

By

Published : Apr 1, 2022, 3:50 PM IST

புது டெல்லி : ரயில் தண்டவாளங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 48 யானைகள் உயிரிழந்துள்ளன என்று வெள்ளிக்கிழமை (ஏப்.1) மாநிலங்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், “ரயில் தண்டவாளங்களில் சிக்கி வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட இடங்களில் வேகக் கட்டுப்பாடுகள் விதித்தல், அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்கள் குறித்து லோகோ பைலட்டுகளை எச்சரிக்கும் பலகை அமைத்தல், ரயில் பணியாளர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு வழக்கமான விழிப்புணர்வு மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

மேலும், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகங்களில் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டேஷன் மாஸ்டரை எச்சரித்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வனத்துறையினரால் யானை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 48 யானைகள் உள்பட 188 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

இதையும் படிங்க : பாகனை தூக்கி வீசிய யானை!

ABOUT THE AUTHOR

...view details