தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம் 'ஹேக்'! - NDRF ட்விட்டர் பக்கம் ஹேக்

தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம்
தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம்

By

Published : Jan 23, 2022, 2:53 PM IST

டெல்லி: தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் NDRF, @NDRFHQ நேற்று சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் இன்று (ஜன.23) தெரிவித்தார்.

ஜனவரி 19ஆம் தேதி தேசிய பேரிடர் மீட்புப் படையின் 17ஆவது எழுச்சி தினம் கொண்டாடிய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால், "தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை நாங்கள் உடனடியாக கவனித்து விட்டோம். விரைவில் ட்விட்டர் பக்கம் மீட்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை ட்விட்டர் பக்கத்தில் இதுவரை பதிவிட்ட எந்தப்பதிவும் காட்டவில்லை. மற்ற ட்விட்டர் பக்கம் போல் செயல்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் - அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்த்தூவி மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details