தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசு தலைவர் தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்தார் திரெளபதி முர்மு... - பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் திரெளபதி முர்மு வேடபு மனு தாக்கல் செய்தார்.

குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்த திரெளபதி முர்மு...
குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்த திரெளபதி முர்மு...

By

Published : Jun 24, 2022, 1:21 PM IST

Updated : Jun 24, 2022, 2:08 PM IST

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவைஆமோதிப்பதற்காக ஆளும் கட்சி மற்றும் கூட்டணித் தலைவர்கள் பலர் உடன் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி முதலில் முன்மொழிந்தார்.

மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் குஜராத்தின் பூபேந்தர் படேல் உட்பட பாஜக தலைமையிலான அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், அக்கட்சியின் பெண்கள் மற்றும் பழங்குடி எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு குழுவும் கையெழுத்திட்டார்கள்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜய்சாய் ரெட்டி மற்றும் கூட்டணியில் இல்லாத பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா ஆகியோரும் அவரது வேட்புமனுவை ஆதரிப்பதற்காக பாராளுமன்றத்தில் இருந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.முர்மு குடியரசுத் தலைவரானால் முதல் பழங்குடியினத் தலைவராகவும், பிரதிபா பாட்டீலுக்குப் பிறகு பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் குடியரசு தலைவராகவும் இருப்பார்.

இதையும் படிங்க:குடியரசு தலைவர் தேர்தல் - திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

Last Updated : Jun 24, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details