ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இம்மாதத்துடன் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த எட்டு ஆண்டுகள் ஏழை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டு கால ஆட்சி பூர்த்தி செய்துள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகான பாஜக அரசு, மக்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலகமே இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. இந்தியாவிலும் மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். இந்த நம்பிக்கை எங்கள் பொறுப்பை அதிகரித்துள்ளது.