தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு: நியாயமான விசாரணை கோரும் தேசிய மகளிர் ஆணையம்! - கல்லூரி மாணவி பாலியல்வன்புணர்வு

ஹிசார் நகரில் ஓடும் ஆட்டோவில் இரண்டு இளைஞர்களால், கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தி, இவ்விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு ஹரியானா டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு
கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு

By

Published : Jan 16, 2021, 10:16 AM IST

டெல்லி:ஹிசார் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் இரண்டு இளைஞர்களால் கடத்தப்பட்டு, ஓடும் ஆட்டோவில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

ஊடகங்கள் வாயிலாக இவ்விவகாரம் குறித்து அறிந்து கொண்ட தேசிய மகளிர் ஆணையம், இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பை மாநில காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என, ஹரியானா டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், எம்.எஸ். ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் பாலியல் வன்புணர்வு தொடர்பாக வெளியான தகவலில் குழப்பம் உள்ளதால், இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தி, அதுதொடர்பாக எடுக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு அவர் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க:நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ABOUT THE AUTHOR

...view details