நாடு முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பெருந்தோற்று காலத்தில் அதிக ஆபத்தைச் சந்திக்கும் கர்ப்பிணிகளுக்காக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையைத் தேசிய மகளிர் ஆணையம் ஆரம்பித்துள்ளது.
இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள், மருத்துவ உதவி உட்பட எவ்வித பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பார்கள். இச்சேவைக்கு 9354954224 என்கிற வாட்ஸ்அப் எண்ணுக்குத் தாய்மார்கள் தங்களின் விவரங்களைக் குறுஞ்செய்தி அனுப்பினாலே போதுமானது ஆகும். இதே போல, helpatncw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிட்டுள்ளனர்.