தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி மாணவி தற்கொலை: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை தாக்கல்

12ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தனது அறிக்கையை தாக்கல் செய்த NCPCR, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தியுள்ளது.

NCPCR
NCPCR

By

Published : Mar 3, 2022, 2:18 PM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஜனவரி 19ஆம் தேதி தற்கொலை காரணமாக உயிரிழந்தார். ஹாஸ்டல் வார்டனின் கொடுமை காரணமாக இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்த நிலையில், வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார். கட்டாய மதமாற்றம் செய்யக்கோரி தொல்லை கொடுத்ததன் காரணமாகவே இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு வழக்கை முறையாக விசாரிக்கவில்லை மாணவியின் பெற்றோர் தரப்பு, பாஜக ஆகியோர் புகார் அளித்த நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்கை விசாரிக்கிறது. வழக்கின் விசாரணை குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) 10 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மதமாற்றம் அது தொடர்பான காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை, பள்ளி நிர்வாகம் முறையாக பதிவு செய்து செய்யப்படவில்லை எனவும் எனவே, பள்ளி நிர்வாகம் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் பெற்றோருக்கு உரிய மனநல ஆலோசனை, நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று பதிவு செய்யப்படாத பள்ளி விடுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் முறையாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஷ்யா-உக்ரைன் போர்: குவாட் அமைப்பு தலைவர்கள் முக்கிய ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details