தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சுப்ரியா சூலே. மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் மகள் இவர்.
மகாராஷ்டிராவின் பாராமதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவருக்கு கோவிட் பாதிப்பு தற்போது உறுதியாகியுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது கணவர் சதானந்த் சூலேவுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.