தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லட்சத்தீவு எம்.பி. பைசலின் தகுதி நீக்கம் வாபஸ் - காரணம் இதுதானாம்! - லட்சத்தீவு எம்பி பைசல்

லட்சத்தீவுகளின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசலின் தகுதி நீக்கம் திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 29, 2023, 3:48 PM IST

டெல்லி:லட்சத்தீவுகள் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல். கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த லட்சத்தீவு செசன்ஸ் நீதிமன்றம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி, பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. மேலும் அங்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. பைசல் தரப்பில், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து பைசல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”எனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நான் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, எம்.பி. பைசலின் தகுதி நீக்கம் திரும்பப்பெறப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதேபோல் ராகுல் காந்தி எம்.பி. பதவியின் தகுதி நீக்கமும் திரும்பப் பெறப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: Karnataka Election: கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details