டெல்லி:கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உட்பட பலரை என்சிபி கைது செய்தது. அப்போது மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவராக இருந்த சமீர் வான்கடே சென்னையில் உள்ள இயக்குனரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆர்யன்கான் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஆர்யன் கானுக்கு க்ளீன் சிட் வழங்கியது. வான்கடே தலைமையிலான விசாரணையில் தெளிவான ஆதாரங்கள் ஏதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்பட்டது.