நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப்பொருள் கும்பலுக்கும் பாலிவுட் திரையுலகிற்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) விசாரணை நடத்தி, நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பல பிரபலங்களிடம் விசாரணை நடத்திவருகிறது. அதில், பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விசாரணையின் போது, பாலிவுட் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் மீதும் சந்தேகிக்கப்பட்டு, மும்பையில் உள்ள அவரது வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது சிறிதளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்!