மும்பை:மகாராஷ்ராவின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அக்டோபர் 2ஆம் தேதி இரவு கார்டிலியா எனும் கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் உள்பட 11 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) பிடித்துள்ளனர்.
அடுத்த நாள் (அக். 3) காலை வரை மும்பை காவல்துறையினரும் இந்தத் தகவல்தான் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீடீரென காலையில் எட்டு பேர் பிடிப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதற்கிடையே மூன்று பேரை விடுவித்துள்ளனர்.
பாஜக தலைவரின் மருமகன்
ரிஷப் சச்தேவா, பிரதிக் காபா, அமீர் பர்னிச்சர்வாலா ஆகிய மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் சச்தேவா, பாஜகவின் இளைஞரணி தலைவரான மோகித் கம்போஜ்-இன் மருமகன் என்பது தெரியவந்தது.
பிடிப்பட்டு இரண்டு மணிநேரத்தில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் சச்தேவா விடுவிக்கப்பட்டபோது அவரது தந்தை என்சிபி அலுவலகம் வந்து அவரை அழைத்துசென்றுள்ளார்.