மும்பை:கடந்தாண்டு நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு இன்று (மே 27) 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள 14 குற்றவாளிகளில் ஆர்யக்கானின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆர்யன் கான் குற்றமற்றவர் என்பது உறுதியாகி உள்ளது.
போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் நிரபராதி - போதைப்பொருள் வழக்கு
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் நிரபராதி என போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறியதாவது, "போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஆர்யன் கான், மொஹக் ஜஸ்வால் ஆகியோரை தவிர அனைவரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆர்யன் கான் உள்பட மொத்தம் ஆறு பேருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்புபிரிவினரால் சரியான ஆதாரம் சமர்பிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 3ஆம் தேதி அன்று சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் உள்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், நடைபெற்ற விசாரணையில் மொத்தம் 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.