மும்பை:பிரபல இந்தி காமெடி நடிகை பாரதி சிங் அவரது கணவருடன் மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதி சிங்கின் வீட்டில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் பாரதி சிங், அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா ஆகியோருடன் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபரும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வழக்கு: காமெடி நடிகை மற்றும் கணவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் - நடிகை பாரதி சிங் மற்றும் கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இந்தி நகைச்சுவை நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா ஆகியோருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஜாமீனில் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் ரூ.500க்கு ஏலம் போகும் பெண்கள்... மாநில அரசுக்கு பாய்ந்த நோட்டீஸ்...