தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் ரயில் நிலையத்திற்குள் புகுந்த நக்சல்கள் - பிகார் செய்திகள்

பாட்னா: சவுரா ரயில் நிலைய அலுவலரை நக்சல்கள் சிறைப்பிடித்ததால், பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிகார்
பிகார்

By

Published : Jul 31, 2021, 3:01 PM IST

Updated : Jul 31, 2021, 3:16 PM IST

பிகாரில் சவுரா ரயில் நிலையத்தை நக்சல்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலைய அலுவலரை சிறைப்பிடித்த நக்சல் கும்பல், ரயில் நிலையத்தை குண்டுவைத்து வெடிக்கவைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கிடைத்த தகவலின்படி, இன்று (ஜூலை 31) அதிகாலை நக்சல்கள் சவுரா ரயில் நிலையத்திற்கு வந்தனர். காவல் துறையினரைப் போல வேடமிட்டிருந்த அவர்கள், ரயில் நிலைய அலுவலர் வினய் குமாரின் அறைக்குள் நுழைந்து, இது நக்சலுக்கான வாரம், அனைத்து விதமான ரயில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு நிலைய அலுவலரை மிரட்டியுள்ளனர்.

இதற்கு வினய் மறுப்பு தெரிவிக்க, உடனடியாக துப்பாக்கியை வெளியே எடுத்து மிரட்டியுள்ளனர். மேலும், ரயில் நிலையத்தை குண்டுவைத்து வெடிக்கவைத்துவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக, பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நக்சல்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த அலுவலர், ஊழியர்கள் அவர்களிடமிருந்து தப்பி வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்குள், அங்கிருந்து நக்சல் கும்பல் தப்பியோடியது. அப்பகுதி முழுவதும் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் நடமாட்டம் இல்லாதது உறுதியானதையடுத்து, ரயில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. சுமார் 30 நிமிடங்கள், நக்சல் கட்டுப்பாட்டில் சவுரா ரயில் நிலையம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடுவானில் திக் திக்.. தாமதமாக உணர்ந்த விமானிகள்.. திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய விமானம்!

Last Updated : Jul 31, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details