சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமவாசிகளை நக்சல்கள் கொன்றதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் இருவர் கொலை: நக்சல்களின் குறிப்பில் காரணம்! - நக்சல்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் பொதுமக்களில் இருவரைக் கொன்றுள்ளதாக அம்மாநில காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் இருவரை கொன்ற நக்சல்கள்
இது குறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எல். தருவ் கூறுகையில், "இறந்தவர்களின் உடலின் அருகே நக்சல்கள் எழுதிய குறிப்பு ஒன்று கிடந்தது.
அந்தக் குறிப்பில் காவல் துறையினருக்குத் தகவல் அளிப்பவர்களாக இருந்ததால் இருவர் நக்சல்களால் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.