பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மாதுரி கிராமத்தில் நக்சல் அமைப்பை சேர்ந்த முக்கிய நபர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அப்பகுதியை கோப்ரா கமாண்டோக்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, மறைந்திருந்த நக்சல் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, கமாண்டோக்கள் நடத்திய பதில் தாக்குதல் நக்சல் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிகாரில் நக்சலை சுட்டுக்கொன்ற கோப்ரா கமாண்டோஸ்! - பிகார் கோப்ரா தாக்குதல்
பாட்னா: கயா மாவட்டத்தில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமான நக்சல் பயங்கரவாதி அலோக், கோப்ரா கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ttack
முதற்கட்ட விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நக்சல் அமைப்பு சேர்ந்த அலோக் என்பதும், இரண்டு பேரை கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஒரு ஏ.கே.-47 துப்பாக்கி, ஒரு இன்சாஸ் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.