தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆடையை மாற்றுவதற்கு முன்பு, எண்ணத்தை மாற்றுங்கள்' - முதலமைச்சருக்கு அமிதாப் பேத்தி பதிலடி!

டேராடூன்: பெண்களின் ஆடையை மாற்றுவதற்கு முன்பு உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 18, 2021, 6:49 PM IST

Navya Naveli Nanda
அமிதாப் பேத்தி

உத்தரகண்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் திரத் சிங் ராவத், பெண்களின் ஆடையை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "ஒரு முறை நான் விமானத்தில் பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

என்ன மாதிரியான நடத்தை இது?” கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது. இது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட "மோசமான முன்மாதிரி". பெண்கள் ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இவை அனைத்தும், மேற்கத்திய மயமாக்கலின் ஒரு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற பெண்கள் சமூகத்திற்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, முதலமைச்சரின் சர்ச்சை கருத்துக்குப் பதிலளித்துள்ளார். அவரது பதிவில், " எங்கள் ஆடையை மாற்றுவதற்கு முன், உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய கருத்தை நீங்கள் சமூகத்தில் சொல்வது, என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்துகிறது. நான் கிழிந்த ஜீன்ஸ் தான் அணிவேன். நன்றி. அதனைப் பெருமையுடன் அணிந்துகொள்வேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நவ்யா நவேலி நந்தா பதிவு

முதலமைச்சரின் இந்தக் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரில் #RippedJeansTwitter, #rippedjeans, #UttarakhandCM ஆகிய ஹேஷ்டாக்குகளும் ட்ரெண்டாகி வருகின்றன.

இதையும் படிங்க:மாசுபாட்டில் கவலைகொள்ள வேண்டுமே தவிர கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் அல்ல - சிவசேனா எம்பி

ABOUT THE AUTHOR

...view details