பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்தான அறிவிப்பை சித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகல் - பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகல்
15:19 September 28
அதில் காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்திக்கு எழுதப்பட்ட சித்துவின் ராஜினாமா கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 'நான் உங்களுக்குச் சொன்னேன் ... அவர் ஒரு நிலையான மனிதர் அல்ல,எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு அவர் பொருந்தமாட்டார் என்று' எனத் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சித்துவின் ராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் விமர்சித்து இருப்பது, இருவருக்கும் இடையே பிணக்கு இருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது.