தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Sidhu - Imran Khan: பாகிஸ்தானில் பாசத்தைப் பொழிந்த சித்து; கிளம்பும் புது சர்ச்சை - கர்தார்பூர் நடைபாதை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அண்ணன் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அழைத்ததற்கு, பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை பொறுப்பாளர் அமித் மால்வியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து, Navjot Singh Sidhu
நவ்ஜோத் சிங் சித்து

By

Published : Nov 20, 2021, 9:10 PM IST

குர்தாஸ்பூர்: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவ் இறுதியாகச் சென்ற இடம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் ஆகும்.

இதையும் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரையும் இணைக்கும் கர்தார்பூர் நடைபாதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் கடந்த புதன்கிழமை (நவம்பர் 17) மீண்டும் திறக்கப்பட்டது.

நுழைவு இசைவு (Visa) இல்லாமல் பாகிஸ்தான் செல்ல இந்தப் பாதை பயன்படுத்தப்படுகிறது. 4.7 கி.மீ. தூரம் உள்ள இந்தப் பாதை இந்திய எல்லையையும், பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பையும் இணைக்கும் பாதையாக உள்ளது. 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாதை கரோனா காரணமாக நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்தது.

சித்து - இம்ரான் கான் நட்பு

இதையடுத்து, குருத்வாரா தர்பார் சாகிப்புக்கு பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் செல்லும் குழுவினரின் பெயர்ப் பட்டியல் நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் புது சர்ச்சை ஒன்று கிளம்பியது. இந்நிலையில், சித்து பாகிஸ்தானில் உள்ள அந்த குருத்வாராவுக்குச் செல்ல இன்று (நவ.20) கர்தார்பூர் நடைபாதை கடந்து பாகிஸ்தான் சென்றடைந்தார்.

செய்தியாளர் கேள்விகளுக்கு, தற்போது வேண்டாம் என்றும் குருத்வார் சென்று திரும்பும்போது பேசுகிறேன் என்றும் கூறினார். இந்நிலையில், பாகிஸ்தான் சென்றடைந்ததும், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது சகோதரர் போன்றவர்' எனக் கூறியுள்ளார்.

சித்துவும் சர்ச்சையும்

இதற்கு பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை பொறுப்பாளர் அமித் மால்வியா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " ராகுல் காந்திக்கு மிகவும் பிடித்தமான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமரை அண்ணன் எனக் கூறியுள்ளார்.

கடந்த முறை பாகிஸ்தான் படைத்தளபதியை கட்டிப்பிடித்துபோதும் பாராட்டுகள் குவிந்தன. காந்தியின் வழித்தோன்றல்கள் கேப்டன் அமரீந்தர் சிங்கை தவிர்த்து சித்துவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை" எனக் குறிப்பிட்டு, ராகுல் காந்தியையும் சித்துவையும் பகடி செய்துள்ளார்.

கர்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்டதற்கு, நவ்ஜோத் சிங் சித்து பெரும் பங்கு வகித்தார். குறிப்பாக, நவ்ஜோத் சிங் சித்துவின் பணியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாராட்டி இருந்தது.

மேலும், இருவரும் சர்வதேச அரங்கில் ஒரே சமயத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பதால், 2018ஆம் ஆண்டு இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்றார்.

இதன்பின்னரே, அவர்களின் நட்புறவு வெளியுலகிற்குத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Navjot Singh Sidhu: பாகிஸ்தானில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details