மத அடையாளங்களைக் கொண்ட சால்வையை அணிந்து சீக்கியர்களின் மனதைப் புண்படுத்திய காரணத்திற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கோர வேண்டும் என அகல் தக்த் என்ற சீக்கிய அமைப்பு முன்னதாகக் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், சீக்கியர்கள் மனதை தெரியாமல் புண்படுத்திய காரணத்திற்காக மன்னிப்பு கோருவதாக சித்து தற்போது தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோரிய சிக்சர் சித்து : காரணம் என்ன தெரியுமா? - மன்னிப்பு கோரிய சித்து
சண்டிகர்: மத அடையாளங்களைக் கொண்ட சால்வையை அணிந்து சீக்கியர்களின் மனதைப் புண்படுத்திய காரணத்திற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீ அகல் தக்த் ஜாதேதர் என்ற அமைப்பு அனைத்திற்கு மேலானது. தெரிந்தோ தெரியாமலோ ஒரு சீக்கியரின் மனதை புண்படுத்தியிருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன். லட்சக்கணக்கானோர் சீக்கிய மதத்தின் சின்னங்கள் அடங்கிய டர்பன்கள், உடைகள், டாட்டூக்கள் ஆகியவற்றை பெருமையுடன் அணிந்துகொள்கிறார்கள். நானும் பெருமையுடன் எந்தவித நோக்கமுமின்றிதான் சால்வையை அணிந்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அகல் தக்த் என்ற உச்சபட்ச சீக்கிய அமைப்பின் தலைவர் கியானி ஹர்பிரீத் சிங், சித்துவின் செயல் துரதிஷ்டவசமானது என்றும் சீக்கியர்களின் பாரம்பரியத்திற்கு எதிராக அமைந்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அமிர்தசரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சித்து, ஜலந்தரில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளை சந்தித்துப் பேசும்போது, சீக்கிய மத அடையாளங்கள் கொண்ட சால்வையை அணிந்திருந்தார்.