டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் நவ்ஜோத் சிங்குக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க : நவ்ஜோத் சிங் சித்துவை 60 முறை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!
இந்நிலையில், “வருகிற சட்டப்பேரவை (2022) தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் கொடிதூக்கினார் சித்து.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் பிரியங்கா காந்தியையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூன் 30) நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கட்சி மற்றும் ஆட்சி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக நவ்ஜோத் சித்து, பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். இது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சீறும் சிக்ஸர் சித்து, ஆட்டம் காணும் பஞ்சாப் முதல்வர் நாற்காலி!