2020இல் நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள்! - கனமழையால் ஹைதராபாத் வெள்ளத்தில் மூழ்கியது
2020ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட புயல், வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்த விவரங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
2020ஆம் ஆண்டு இந்தியா எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள்!
By
Published : Dec 31, 2020, 11:31 AM IST
2020இல் இந்தியாவைத் தாக்கிய புயல்கள்
புயல்
காற்றின் வேகம்
மாநிலங்கள்
உயிரிழப்பு
பாதிப்புகள்
ஆம்பன்
(மே 2020)
190 கி.மீ.
மேற்குவங்கம், ஓடிசா
86
மேற்குவங்கம், ஒடிசாவில் கடும் பாதிப்பை இந்தப் புயல் ஏற்படுத்தியது.
86 பேர் புயலால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
மேற்குவங்கத்தின் 14 மாவட்டங்களிலும், ஒடிசாவின் ஆறு மாவட்டங்களிலும் பயிர்கள் சேதமடைந்தன.
மேற்கு வங்க மாநில வேளாண் துறை கணக்கீட்டின்படி, ரூ.370 கோடி மதிப்பிலான பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. ஒடிசாவில், 1,20,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்பு அடைந்தன.
வடக்கு, தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு, மேற்கு மிட்னாபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டன.
ஒடிசாவில் சுமார் 45 லட்சம் மக்கள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டனர்.
நிசர்கா
(ஜூன் 2020)
110 கி.மீ.
மகாராஷ்டிரா, கோவா, குஜராத்
6
1891ஆம் ஆண்டுக்குப் பின்பு மகாராஷ்டிராவை தாக்கிய கடுமையான புயல்
குஜராத்திலுள்ள கொங்கன் பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
12,440 ஏக்கர் விளைநிலம் பாதிப்படைந்தன.
60,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பாதிப்படைந்ததாக மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்திருந்தது.
நிவர்
(நவம்பர் 2020)
120 கி.மீ.
தமிழ்நாடு
3
நிவர் புயல் புதுச்சேரிக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில் கரையைக் கடந்தது.
சுமார் 2.5 லட்சம் மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மூன்று பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் தாழ்வான பகுதிகளிலிருந்து 28,161 குழந்தைகள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ச்சியான மழையால், திருவாரூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின.
கடலூரில் 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சுமார் 20 ஆயிரம் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின.
காட்டுத்தீ:
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மே மாதம் ஏற்பட்டு பல நாள்கள் நீடித்த காட்டுத் தீயால் 51 ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டது. 1 லட்சம் மரங்கள் தீயில் கருகியதோடு இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயமுற்றனர்.
வெட்டுக்கிளி படையெடுப்பு
2019, 2020ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா ஒரு மோசமான வெட்டுக்கிளித் தாக்குதலைச் சந்தித்தது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் இந்த வெட்டுக்கிளி தாக்குதல்கள் இருந்தன.
வெட்டுக்கிளி படையெடுப்பு
ஈரான், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் படையெடுத்த இந்த வெட்டுக்கிளிகள் குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் தனது தாக்குதலைத் தொடர்ந்தது.
மே மாதத்தில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பாலான விளைநிலம் இந்த வெட்டுக்கிளித் தாக்குதலுக்கு உள்ளாகின.
வெட்டுக்கிளி தாக்குதலால்
ஜுன் மாதத்தில், டெல்லி என்சிஆர், குருகிராம் பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் வந்தது மணல்புயல் போல் தோற்றமளித்தது.
மத்திய அரசின் சேத அறிக்கை
2019-20இல் ராஜஸ்தான் மாநிலத்தில், வெட்டுக்கிளி தாக்குதலால் எட்டு மாவட்டங்களில் 1,79,584 ஏக்கர் விளைநிலம் பாழாகின.
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் விளைநிலத்தின் சேதம் 19,313 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டது.
2020-21 காலப்பகுதியில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிகார், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய 10 மாநிலங்களில் வெட்டுக்கிளி ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன. குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப், பிகார் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தன.
2020ஆம் ஆண்டு இந்தியா எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள்!
20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலம் பாழாகியது.
காசிரங்கா தேசிய பூங்காவில், 14 காண்டாமிருகங்கள் உள்பட 137-க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்தன.
பிகார்
16 மாவட்டங்களைச் சேர்ந்த 80,36,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
550,792 பேர் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிகார் வெள்ளம் பாதிப்பு
உத்தரப் பிரதேசம்
1,090 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட 20 விழுக்காடு அதிகமான மழை பொழிந்தது.
38,248 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் நிலம் நீரில் மூழ்கியது.
அசாம்கர், மவு, கோண்டா மாவட்டங்களில் மூன்று அணைகள் சேதமடைந்தன.
கேரளா
ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் அதிகமான அளவு மழை பொழிந்தது. இதனால், 22 பேர் உயிரிழந்தனர்.
19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததாக அம்மாநில அரசு மதிப்பிட்டது.
ஹைதராபாத் (தெலங்கானா)
அக்டோபர் 18ஆம் தேதி பெய்த கனமழையால் ஹைதராபாத் வெள்ளத்தில் மூழ்கியது.
அக்டோபர் 18ஆம் தேதி 11 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
70 பேர் இந்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
கனமழையால் ஹைதராபாத் வெள்ளத்தில் மூழ்கியது
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 3 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.
சுமார் 3,400 வீடுகள் சேதமடைந்தன.
5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டது.
நிலச்சரிவு:
கேரளா
கேரளா இடுக்கி நிலச்சரிவு
இடுக்கி மாவட்டம் மூணாறு பெட்டி முடி எஸ்டேட் பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 52 பேர் உயிரிழந்தனர். 19 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற தகவல் இல்லை.