தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய விளையாட்டு விருதுகள்: பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருதுகள் - திரவுபதி முர்மு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருதுகள்
பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருதுகள்

By

Published : Nov 14, 2022, 9:46 PM IST

2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 25 பேருக்கு அர்ஜூனா விருதும், துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் தடகளத்தில் பூனியா உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது கிரிக்கெட் வீரர் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரபுல்லா கோஷ், ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளாகும். விளையாட்டு வீரர்களுக்கான விருதை வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க: HBDNehru: மனித மாண்புகளை மகளுக்கு கடிதம் மூலம் கற்றுக்கொடுத்த நேரு

ABOUT THE AUTHOR

...view details