ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோனிகா லாயக் (26). சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாததால் இரண்டு முறை தகுதி பெற்றபோதிலும், இவர் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட இயலாத சூழலில் இருந்தார்.
இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, நடிகர் சோனு சூட் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் ரைஃபிளை அவருக்கு பரிசாக அளித்தார்.
பின்னர், கொல்கத்தாவில் அர்ஜுனா விருது பெற்ற ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்தார் கோனிகா லாயக். இவர் இன்று தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.