ஐதராபாத்: ஓய்வு பெறுவதையும் சேமிப்பையும் பற்றிப் பேசும்போது, அதற்கு இன்னும் நாட்கள் இருகின்றன என ஒவ்வொரு முறையும் இந்தப் பேச்சை தள்ளிப்போடுவது நம்மிடையே வழக்கம் ஆகிவிட்டது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆரம்ப காலங்களிலிருந்து வருமானம் ஈட்டும்போது இதற்கான திட்டமிடல் மிகவும் அவசியம்.
இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற பல திட்டங்கள் உள்ளன. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நமது தற்போதைய வருமானத்திற்கு சமமான எதிர்கால நிதியை அமைத்தல் வேண்டும்.
முன்கூட்டியே தொடங்குங்கள்:முதலீட்டுத் திட்டங்கள் என்பது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். நாம் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறோம் என்று வைத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 8% வட்டி விகிதம் கொடுக்கப்படும். இதனால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை 20-ம் ஆண்டு முடிவில் பெறலாம். இதுவே ஐந்து வருடங்கள் தாமதமாக தொடங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நிதி ரூ.15 லட்சமாக வரையறுக்கப்படும். எனவே, முதலீடுகளை எப்பொழுதும் முன்கூட்டியே தொடங்க வேண்டும்.
அதிக வருமானம் ஈட்டுவதற்கு : நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை மிஞ்சும் திறன் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம். நீண்ட கால முதலீட்டிற்கு ஈக்விட்டி அடிப்படையிலான திட்டங்களை (மியூச்சுவல் ஃபண்டுகள், என்பிஎஸ்) தேர்வு செய்தால் இரட்டை எண் இலக்க வருமானத்தைப் பெறலாம். 1995 முதல் நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு செய்தோம் என்று வைத்துக் கொண்டால், 1995 முதல் இப்போது வரை ஒவ்வொரு வருடமும் பலமுறை இரட்டை இலக்க வருமானத்தை அளித்து வரும். இதனால் நீண்ட கால முதலீட்டில் எந்த இழப்பும் ஏற்படாது என்பதை பங்குகளில் முதலீடு செய்யும்போது மனதில் கொள்ள வேண்டும்.
குறைந்த கட்டணத்தில்:சந்தை அடிப்படையிலான திட்டங்களில் முதலீடு செய்யும் போது சில கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, குறைந்த சதவீத கட்டணங்கள் கொண்ட திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. பண மேலாண்மை செலவு 25ஆண்டுகளில் 1 சதவீதமாக இருந்தாலும், நிதி 10-15 சதவீதம் வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதுவே குறைந்த நிதி மேலாண்மைச் செலவுகளை செலுத்தினால், 12 முதல் 15 சதவிகிதம் அதிக நிதியைப் பெறலாம்.