தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை - நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு! - சோனியா காந்தியிடம் 6 மணி நேர விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

National
National

By

Published : Jul 26, 2022, 9:55 PM IST

டெல்லி:நேஷனல் ஹெரால்டு வழக்கின் 2ஆம் கட்ட விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (ஜூலை 26) அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவருக்கு தேவையான மருந்துகளுடன் பிரியங்கா காந்தி மற்றொரு அறையில் காத்திருந்ததாக தெரிகிறது. சோனியா காந்தியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

நாளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இன்று சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் காங்கிஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராகுல்காந்தி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2ஆம் கட்ட விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details