டெல்லி:ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொது நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டபோது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவர் 2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பிரதமராக இருந்தார்.
இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று டெல்லி செங்கோட்டையில் உள்ள குடியசுத் தலைவர் மாளிகையிலும், நாடாளுமன்றத்திலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.