தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய மருத்துவர்கள் தினம் - தலைவர்கள் வாழ்த்து - வெங்கய்யா நாயடு மருத்துவர் தின வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று (ஜூலை 1) குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

National Doctors
National Doctors

By

Published : Jul 1, 2021, 12:56 PM IST

Updated : Jul 1, 2021, 2:28 PM IST

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தலைசிறந்த மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திரா ராய்யின் பிறந்தநாள், ஜூலை 1ஆம் தேதி ஆகும். அவரின் நினைவை போற்றும் விதமாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயடு

தன்னலமின்றி நேரம் காலம் பாராமல் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். தன்னுயிரை பணயம் வைத்து மக்கள் உயிரை காக்கும் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கோவிட் காலத்தில் மக்கள் விதிகளை பின்பற்றி மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். உலக அரங்கில் இந்திய மருத்துவம் கண்டுள்ள எழுச்சி சிறப்பானது. அதற்கு வழிகாட்டியாக இருந்த மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் மக்களின் உயிரை காக்க அர்பணிக்கும் மருத்துவர்களுக்கு நாம் என்றும் கடன்பட்டுள்ளோம் என கூறியுள்ளார். நாடு முழுவதும் 1991ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:798 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Last Updated : Jul 1, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details