'மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்' என்ற வார்த்தைக்குள் எத்தனை உண்மை இருக்கிறது. அந்தளவுக்கு ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப்பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது இந்த நண்பர்கள் தான். அத்தகைய நட்புறவைக் கொண்டாடும் நாள் தான் நண்பர்கள் தினம். ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்றுதான் 'உலக நண்பர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்நாள் பல நாடுகளில் வெவ்வேறு நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல, 'தேசிய நண்பர்கள் தின' கொண்டாட்டத்தின்போது, நம்முடன் எந்த சூழ்நிலையிலும் துணையாக நிற்கும் நண்பர்களுடனான புகைப்படங்களை, நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து, வாழ்த்து மழையைத் தெரிவிக்கின்றனர்.
என்ன தான் ஒருத்தருக்குப் பல நண்பர்கள் இருந்தாலும், ஒரு சிலர் தான் சிறு வயது முதலே கூடவே வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்களுடன் நட்பையும் தாண்டி இணை பிரியாத பந்தம் ஒன்று உருவாகியிருக்கும்.
அவர்களுக்காகவே ஸ்பேஷலாக அமெரிக்காவில் ஜுன் 8ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் தேசிய 'பெஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் டே'.