தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிளியைக் கண்டுபிடித்து தந்தால் ரொக்கப்பரிசு... ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி தேடும் பாசக்கார குடும்பம்! - கிளி மாயமான சம்பவம்

மத்தியப்பிரதேசத்தில் காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்து தருவோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஊர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

narmadapuram
narmadapuram

By

Published : Oct 23, 2022, 5:42 PM IST

நர்மதாபுரம்(மத்தியப் பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம், நர்மதாபுரத்தில் வசிக்கும் சித்ரா சக்கரவர்த்தி என்ற பெண்மணி செல்லப்பிராணியாக பச்சைக்கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் கிளியை சித்ரா, தனது குடும்ப உறுப்பினரைப் போல கவனித்துக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளி காணாமல் போனது. இதனால் சித்ரா உள்பட மொத்தக்குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. பல இடங்களில் கிளியைத்தேடியும் கிடைக்கவில்லை. கிளி காணாமல் போன கவலையில் சித்ரா 4 நாட்களாக உணவு அருந்தாமல் இருந்ததால், அவரது உடல்நிலை மோசமானது.

இதையடுத்து கிளியை கண்டுபிடிக்க சித்ராவின் குடும்பத்தினர் அதிரடி முடிவை எடுத்தனர். கிளியை கண்டுபிடித்து தந்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதுதொடர்பாக ஊர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தீபாவளிப் பண்டிகையையொட்டி அனைவரும் மகிழ்ச்சியாக உள்ள நேரத்தில், ஆசைக் கிளி மாயமானதால் சித்ராவின் வீட்டில் இருள் சூழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: புற்று நோயாளிகளுக்கு முடி தானம் செய்த 2 வயது சிறுமி

ABOUT THE AUTHOR

...view details