தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிரதமரை கொல்ல தாவூத்தின் ஆட்கள் சதித்திட்டம்' மும்பை போலீசார் தகவல் - பிரதமரை கொல்ல தாவூத்தின் ஆட்கள் சதித்திட்டம்

பிரதமர் மோடியை கொல்ல நிழல் உலக தாதா தாவூத்தின் ஆட்கள் சதித்திட்டம் தீட்டுவதாக மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மும்பை போக்குவரத்து துறை எண்ணுக்கு ஆடியோ செய்தி வந்துள்ளது. இதையடுத்து மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மும்பை போலீசார் தகவல்
மும்பை போலீசார் தகவல்

By

Published : Nov 22, 2022, 1:18 PM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏப்ரல் மாதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை என்ஐஏ கிளைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 20 கிலோ ஆர்.டி.எக்ஸ் தயாராக வைத்திருப்பதாகவும், மக்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியை கொல்ல நிழல் உலக தாதா தாவூத்தின் ஆட்கள் சதித்திட்டம் தீட்டுவதாக மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மிரட்டல் அழைப்புகள் வருவதால் மாநிலம் முழுவதும் மும்பை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மும்பை போக்குவரத்து துறைக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தது. அதில் மும்பை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் வெடித்துச் சிதறும் என்று அச்சுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Google Pay, PhonePe-யில் விரைவில் பரிவர்த்தனை உச்ச வரம்பு - NPCI திட்டம்

ABOUT THE AUTHOR

...view details