புதுச்சேரி:புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில், மாநில அந்தஸ்து பெறுவது தலையாய கடமை எனக்கூறி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. மாநில அந்தஸ்து கோரிக்கையை பாஜக உதாசீனம் செய்கிறது.
5 ஆண்டுகளில் நாங்கள் பட்ட துன்பத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்து கோப்புகளையும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்தார்.
மாநில அந்தஸ்தை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம்- நாராயணசாமி மாநில அந்தஸ்துதான் புதுச்சேரி மாநில நலனையும், பாதுகாப்பையும், உரிமையையும், பாதுகாக்கும். ஆனால், பிரதமரை சந்தித்த பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து பேசவில்லை. இதில் இருந்து அவர்களுக்கு மாநில அந்தஸ்தில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தும். புதுச்சேரியில் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்யவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:தடுப்பூசி மையத்தில் பாஜகவினர் வைத்த பேனரால் பரபரப்பு