நாரதா சிட் பண்ட் ஊழல் விவகாரத்தில் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் பிர்ஹத் ஹகிம் மற்றும் சுபர்தா முகர்ஜியை சிபிஐ அலுவலர்கள் இன்று (மே.17) கைது செய்துள்ளனர். மேலும், ஆளும் திருணமூல் சட்டப்பேரவை உறுப்பினர் மதன் மித்ரா, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சோவ்ஹான் சாட்டர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 6 மணி நேரம் தர்ணா போராட்டம் மேற்கொண்டார். இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.