புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (டிச.18) மடுகரை கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.