தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மதுரா கோயில் தொழுகை நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்' உ.பி. அமைச்சர்! - மதுரா கோயில் முஸ்லீம்கள் தொழுகை

லக்னோ: மதுராவில் உள்ள கோயில் வளாகத்தில் நான்கு முஸ்லிம்கள் தொழுகை செய்துள்ளது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்படி உள்ளது என அம்மாநில அமைச்சர் சவுத்ரி லக்ஷ்மி நாராயண் தெரிவித்தார்.

அமைச்சர் சவுத்ரி லக்ஷ்மி நாராயண்
அமைச்சர் சவுத்ரி லக்ஷ்மி நாராயண்

By

Published : Nov 4, 2020, 5:25 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோயில் வளாகத்தில் நான்கு முஸ்லிம்கள் நேற்று(நவ.03) தொழுகை செய்தனர். அதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.

அதனால் அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், உத்தரப் பிரதேச அமைச்சர் சவுத்ரி லக்ஷ்மி நாராயண் மதுராவில் உள்ள கோயில் வளாகத்தில் நான்கு முஸ்லிம்கள் தொழுகை செய்தது மாநிலத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது - நீதிமன்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details