உதய்பூர்:ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கோகுண்டா வனப்பகுதியில் இளம்ஜோடியின் உடல் நிர்வாணமாக கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் கோகுண்டா போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து இருவரது உடல்களையும் மீட்டு உதய்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், இருவரது அடையாளங்கள் குறித்து விசாரித்துவருகிறோம்.
ராஜஸ்தானில் நிர்வாணமாக கிடந்த இளம்ஜோடியின் உடல்கள் மீட்பு - உதய்பூரில் நிர்வாணமாக கிடந்த இளம்ஜோடி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் இளம்ஜோடியின் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

naked couple bodies recovered in udaipur
இந்த சம்பவயிடத்தில் இளைஞரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுக்கள் சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளன. முதல்கட்ட தகவலில் 2 நாள்களுக்கு முன்பே இருவரும் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் யாரேனும் காணவில்லையா என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - 5 இளைஞர்கள் கைது