நாக்பூர்:ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களில் சிலர், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சாக்லெட், பிஸ்கட், டல்கோனா காபி போன்றவற்றை செய்து மகிழ்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்காக யூடியூப் வீடியோவைப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையிடம் வசமாக மாட்டியதை நாம் பார்த்தோம்.
அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், யூடியூப் வீடியோ பார்த்து வெடிகுண்டைத் தயாரித்துள்ளார். இந்த வெடிகுண்டை ஒரு கட்டத்தில் செயலிழக்கச் செய்வது எப்படி என்று தெரியாமல் முழித்த அவர், காவல் நிலையத்திற்கு அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றுள்ளார்.