நாக்பூர் (மகாராஷ்டிரா):நாக்பூரைச் சேர்ந்த கபில் வாஸ்னிக் என்பவர், ஸ்விகி மூலம் பிரபல பேக்கரியில் கேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் விவரங்களில், 'கேக்கில் முட்டை சேர்க்கப்பட்டிருந்தால் குறிப்பிடவும்' என்று தெரிவித்து ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் வந்த பிறகு கேக்கை திறந்து பார்த்த அவருக்கு சிரிப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.
பிறந்தநாள் கேக்கில் பெயரை நடுவில் எழுதுவது போல், அந்த கேக்கின் நடுவில் (contain egg) முட்டை சேர்க்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கேக் புகைப்படத்துடன் வாஸ்னிக் இதை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இது ட்விட்டரில் வைரலாகி பலரும், இதற்கு நகைச்சுவை கருத்து பகிர்ந்து வருகின்றனர்.