நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வருடம் தோறும் பர்மா மக்களால் கைகளால் எம்பிராய்டிங் செய்யப்பட்ட பச்சைக்கொடி பெரிய மினராவில் புனித கொடி ஏற்றப்படும்.
அதேபோல இந்த ஆண்டும் விமானம் மூலம் பர்மாவிலிருந்து கொடி நாகூர் கொண்டு வரப்பட்டு நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளையான ஷூஃபி கலிஃபா சாகுல் ஹமீது சாஹிப்பால் பாத்திஹா ஓத பட்டு, பர்மா மக்களின் சார்பாக நாகூர் தர்கா பெரிய மினோராவில் கொடி ஏற்றப்பட்டது.
இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பர்மா மக்களின் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த பிரத்யேக சிறப்பு கொடியை பர்மா நாட்டில் இருந்து ஹாஜி உசேன், ஹாஜி ரஃபி, ஹாஜிமா நசீமா ஆகியோர் பர்மா மக்களின் சார்பாக இந்த கொடியை நாகூர் தர்காவுக்கு எடுத்து ஏற்றிவிட்டு, அதே கொடியை பர்மாவுக்கு எடுத்துச் சென்று அங்கு மோல்மேன் தீவில் அடக்கமாக இருக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவில் பிரார்த்தனையுடன் ஏற்றப்பட்டது.