உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் நாக்டூன் (Nagdoon) என்ற அரியவகை வேர்க்கிழங்கு உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேர்க்கிழங்கு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. உத்தரகாண்ட்டில் 6 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமே காணப்படும் இந்த நாக்டூனை, மலைக்கிராமங்களில் உள்ள மக்கள் பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிழங்கை சாப்பிட்டால், 10 முதல் 12 மணி நேரம் வரை பசி எடுக்காது என்றும், அதேநேரம் உடல் வலிமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை உண்டால், மூட்டுவலி, வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதை பச்சையாக சாப்பிட்டால் வாயில் வீக்கம் ஏற்படும் என்றும், முறையாக சமைத்து உண்டால் அது ஆயுளைக் கூட்டும் அமிர்தத்திற்கு சமம் என்றும் கூறுகின்றனர். உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஜகோல் கிராமத்தில், நாக்டூன் கண்காட்சி நடத்தப்படுகிறது.