மும்பை(மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில், நார்கேட் (Narkhed) தாலுகாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவர், 27 வயதான இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக தனது காதலனிடம் கேட்டபோது, கருவைக் கலைக்கும்படி கூறி, சில மருந்துகளை வாங்கித் தந்துள்ளார். அந்த மருந்துகள் வேலை செய்யாததால்,தான் கர்ப்பமானது வெளியில் தெரிந்துவிடும் என அச்சமடைந்த சிறுமி, யூ-ட்யூபில் சென்று தீர்வு தேடியுள்ளார்.
யூ-ட்யூப் வீடியோக்களில் கூறிய மருந்துகளை வாங்கி, மருத்துவர்களின் ஆலோசனையின்றி தானே பயன்படுத்தியுள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையறிந்த அவரது தாயார், உடனடியாக சிறுமியை நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.