மகாராஷ்டிராவில் உள்ள சிச்வாட் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவின் அஸ்வினி ஜெகதாப் 7 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 2 சுற்று வாக்குகள் நிறைவு பெற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பின்தங்கினார்.
Election Result 2023 Live Update: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் முடிவுகள்! - திரிபுரா தேர்தல் முடிவுகள் 2023
10:25 March 02
சிச்வாட் தொகுதியில் காங்கிரஸ் பின்னடைவு!
10:19 March 02
கஸ்பா இடைத் தேர்தல் - பாஜகவுக்கு பின்னடைவு!
மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தாங்கேகர் 14 ஆயிரத்து 891 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர் ஹேமந்த் ரசானே 509 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
10:12 March 02
பாஜக துணை முதலமைச்சருக்கு பின்னடைவு
திரிபுராவில் பாஜக துணை முதலமைச்சர் ஜிஸ்னு தேவ் வர்மாவுக்கு பின்னடைவு. திப்ரா மோத்தா கட்சி வேட்பாளர் சுபோத் தேப் பர்மா முன்னிலை வகித்து வருகிறார்.
10:07 March 02
மேகாலாயாவில் தொடரும் இழுபறி?
மேகாலயாவில் இதுவரை எந்தக் கட்சிக்கும் முன்னிலை கிடைக்காததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேசிய மக்கள் கட்சி 25 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
10:03 March 02
திரிபுரா, நாகாலந்தில் பாஜக ஆட்சி ?
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. திரிபுராவில் பாஜக கூட்டணி 31 இடங்களிலும், நாகாலாந்தில் பாஜக 39 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
09:56 March 02
திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை!
திரிபுராவில் பாஜக கூட்டணி 35 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் 12 இடங்களிலும், திப்ரா மோர்த்தா கட்சி 11 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
09:53 March 02
நாகாலாந்தில் பாஜக - என்டிபிபி கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
நாகாலாந்து சட்டப்பேரவயில் பாஜக - என்டிபிபி கூட்டணி கட்சி 38 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
09:42 March 02
நாகாலாந்தில் மத்திய அமைச்சர்கள் கட்சி முன்னிலை!
நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் தேசிய குடியரசுக் கட்சி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.
09:36 March 02
முன்னிலை பெற்ற திரிபுரா முதலமைச்சர்!
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிபுரா முதலமைச்சர் மணிக் சஹா முன்னிலை பெற்றார். டவுன் பரடோவலி தொகுதியில் போட்டியிட்டுள்ள அவர் சற்று முன் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் குமாரை விட பின்தங்கி இருந்தார். இந்நிலையில் முதல் சுற்று வாக்கு முடிவில் 344 வாக்குகள் அதிகம் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
09:29 March 02
திரிபுரா முதலமைச்சர் பின்தங்கினார்!
திரிபுரா மாநிலம் டவுன் பர்டோவலி தொகுதியில் போட்டியிடும் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் மணிக் சஹா, காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் குமாரை விட பின்தங்கினார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆஷிஷ் குமாரை, மணிக் சஹா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
09:20 March 02
மகாராடிரா சிச்வாட் இடைத்தேர்தல் பாஜக முன்னிலை!
மகாராஷ்டிரா மாநிலம் சிச்வாட் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அஸ்வினி ஜெகதாப் 676 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நானா கேட் பின்தங்கினார்.
09:14 March 02
மகாராஷ்டிரா இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!
மகாராஷ்டிரா கஸ்பா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகர் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று முடிவில் அவர் 2 ஆயிரத்து 981 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹேமந்த் ரசானே இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
09:08 March 02
மேகாலயாவில் ஆட்சியை தீர்மானிக்குமா திரிணாமுல் காங்கிரஸ்?
60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் 9 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை யார் அமைக்க வேண்டும் என நிர்ணயிப்பதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது.
09:01 March 02
மேகாலயாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை - முதலமைச்சர்
மேகாலாயாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் கன்ராட் சங்கா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்குமென்றும், தேர்தல் முடிவுகள் பற்றி கவலை கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். அவர் போட்டியிட்ட தெற்கு துரா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
08:52 March 02
மேகாலயாவில் தொங்கு சட்டசபையா?
மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் நிலவுகிறது. பாஜக கூட்டணியில் வெளியேறி தனித்து தேர்தலை சந்தித்துள்ளது முன்னாள் முதலமைச்சர் கன்ரட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் கன்ரட் சங்மாவில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளன. இதன் காரணமாக மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
08:49 March 02
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறதா?
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தலா 30 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.
08:38 March 02
மேகாலயாவில் சரித்திரம் படைக்குமா திரிணாமுல் காங்கிரஸ்!
மேகாலயா சட்டப் பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக உள்ள 60 தொகுதிகளில், 4 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
08:35 March 02
நாகாலாந்தில் பாஜக முன்னிலை!
நாகாலாந்து சட்டப் பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. நாகா மக்கள் முன்னேற்ற கழகம் 2 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
08:32 March 02
மேகாலயா தேர்தல் நிலவரம்!
மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேசிய மக்கள் கட்சி13 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
08:22 March 02
திரிபுராவில் பாஜக முன்னிலை:
வடகிழக்கு மாநிலமான திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக 35 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும், திமோக 5-லும் முன்னிலையில் உள்ளன.
06:17 March 02
Election Results 2023: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா தேர்தல் முடிவுகள்!
திரிபுரா, நாகாலந்து, மேகாலயா, ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன.