சில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் முன்னாள் உள்துறை அமைச்சர் லிங்டோவின் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ஆளும் தேசிய மக்கள் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. முதல் அமைச்சர் கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மறுபுறம் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்க தீவிரமாக முன்னைப்பு காட்டி வருகிறது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்க்ள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்னொரு புறம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியில் தேர்தல் ரேசில் ஓடி வருகின்றன. பிரசாரம் கடந்த 25ஆம் தேதி ஓய்ந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.