தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மேற்கு வங்க வாக்காளர்களே நல்லாட்சி, செழிப்பு, வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்!' - மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில், நல்லாட்சி, செழிப்பு, வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு வாக்காளர்களை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கேட்டுக்கொண்டார்.

Nadda
Nadda

By

Published : Apr 26, 2021, 11:01 AM IST

'மேற்கு வங்க வாக்காளர்களே நல்லாட்சி, செழிப்பு, வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்!'

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 26) ஏழாம்கட்ட வாக்குப்பதிவு அங்கு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "மேற்கு வங்கத் தேர்தல் ஏழாம்கட்ட வாக்குப்பதிவில் ஈடுபட்டுவரும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக கோவிட்-19 நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Nadda
அச்சம், ஊழல், பயங்கரவாதம், கொடுங்கோல் ஆகியவற்றிலிருந்து மேற்கு வங்கம் விடுபட - நல்லாட்சி, செழிப்பு, வளர்ச்சி உள்ளிட்டவை மாநிலத்தில் அமைய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, "மேற்கு வங்கத் தேர்தலின் ஏழாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Modi tweet
மேலும், கோவிட்-19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details