கராச்சி: பாகிஸ்தான் கராச்சியில் விநோத நோய் தாக்கி அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள்ளான காலக்கட்டத்தில் மர்ம நோய் தாக்கி அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரி என்ற பகுதியில் மட்டும் 14 குழந்தைகள் வரை மர்ம நோய்க்கு பலியானதாக தகவல் கூறப்படுகிறது. உயிரிழப்புகளுக்கான காரணத்தை அறிய சுகாதாரப் படை களமிறங்கி உள்ளனர். உயிரிழந்தவர்களின் கிராமங்கள் கடற்கரையையொட்டி அமைந்துள்ளதால் கடல் அல்லது தண்ணீர் காரணமாக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது.