ஜம்மு- காஷ்மீர்:ஜம்மு- காஷ்மீருக்கு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் உரையாட இருக்கிறார். இந்நிலையில் இன்று மோடி பேச காத்திருக்கும் இடத்திற்கு சுற்று புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஜம்முவில் உள்ள பிஷ்னா பகுதியில் உள்ள பாலி கிராமத்தில் திறந்தவெளி விவசாய நிலம் ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அக்கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி வரும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே ஜம்மு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் படியான தாக்குதல்கள் நடந்து வந்தன.