தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எந்த விசாரணைக்கும் மகன் தயார் - அமைச்சர் அஜய் மிஸ்ரா உறுதி - அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக முழு விசாரணைக்கு தனது மகன் ஒத்துழைப்பு தருவார் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா உறுதியளித்துள்ளார்.

Ajay Mishra Teni
Ajay Mishra Teni

By

Published : Oct 5, 2021, 5:11 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர், விவசாயிகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் விவசாயிகள் தரப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அஜய் மிஸ்ரா தனது காரில் வந்து சம்யுக்த கிசான் மோர்சா தலைவர் தஜிந்தர் சிங்கை தாக்கியதாகவும், அவர் மீது காரை ஏற்ற முயன்றதாகவும் விவசாய அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அன்று சம்பவயிடத்தில் தான் இல்லவே இல்லை, வேறொரு நிகழ்வில் பங்கேற்றேன் என அஜஸ் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறுகையில், "எந்தவொரு விசாரணை அமைப்புடனும் ஒத்துழைப்புத் தர எனது மகன் தயாராகவுள்ளார்.

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே அனைத்து ஆதாரங்களும் சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். எனது மகன் சம்பவயிடத்தில் இல்லை என்பது உறுதியான ஒன்று. எனவே விசாரணைக்கு அவர் தயாராகவுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவில் இனி இனிமையான ஹாரன் ஒலி

ABOUT THE AUTHOR

...view details