தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"எனது மகள், எனது பெருமை"  மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்டின் காரணம்? - மத்திய அமைச்சர் மன்சுக் மான்டவியா மகள் திஷா

தனது மகள் முன்களப் பணியாளராகச் செயல்படுவதை நெகிழ்ச்சியுடன் மத்திய அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

Mansukh Mandaviya Daughter
Mansukh Mandaviya Daughter

By

Published : Apr 27, 2021, 4:03 PM IST

வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா தனது மகள் குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில், அமைச்சரின் மகள் திஷா முன்களப் பணியாளராக செயல்பட்டுவருகிறார்.

இது குறித்து தனது ட்விட்ரில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமைச்சர், எனது மகள், எனது பெருமை. திஷா, எனது மகளே... உன்னை இது போன்று பார்க்க நீண்ட நாள் காத்திருந்தேன். இதுபோன்ற இக்கட்டான சூழலில், இந்த பெரும்பணியை செய்துவருவது எனக்கு பெருமைளிக்கிறது.

தேசம் உனது தேவையை எதிர்நோக்கியுள்ளது. அதை பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். எனது பேராளிக்கு முழு சக்தி கிடைக்கட்டும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மகள் பி.பி.இ. உடையுடன் உள்ள அமைச்சரின் மேற்கண்ட பதிவுக்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

இதையும் படிங்க:'இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை' ஹரியானா முதலமைச்சர் காட்டமான பதில்

ABOUT THE AUTHOR

...view details